பங்குசார்ந்த பண்ட்களில் முதலீடு அதிகரித்ததால் ஆகஸ்ட் மாதம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்துமதிப்பு 6,300 கோடி ரூபாய் உயர்ந்து 10.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு ரூ.10,06,452 கோடியிலிருந்து ரூ.10,12,824 கோடியாக உயர்ந்தி ருக்கிறது என்று மியூச்சுவல் பண்ட் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்துமதிப்பு 10 லட்சத்துக்கு மேலே முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் சென்றது. சிறு முதலீட்டாளர்களின் பங்க ளிப்பும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பங்கு சார்ந்த பண்ட்களில் 5,217 கோடி ரூபாயும் பேலண்ஸ்டு பண்ட்களில் 448 கோடி ரூபாயும் முதலீடு வந்திருக்கிறது.