பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் கடந்த மாதம் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனால் அவர் தற்கால பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் போலீஸ் காவலை நீட்டித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து வங்கித்தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக சிண்டிகேட் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ்க்கு வங்கி நிர்வாகம் தகவல் கொடுத்திருக்கிறது.
புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இன்னும் 11 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் இந்த வங்கிப்பங்கு 3.8 சதவீதம் சரிந்து முடிவடைந்தது.