பொதுத் தேர்தலை ஒட்டி பெட்ரோல் விலையைக் குறைக்க சவுதியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக பெட் ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிப் பால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்தில் லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் உற்பத்தி நாடுகளும், ரஷ்யாவும் எண்ணெய் விநி யோகத்தை மேலும் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறுகின்றன. இதனால் மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.
வரும் மே மாதம் தேர்தல் வரவிருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல் விலையைக் குறைப்பதற்கு உதவ வேண்டுமென சவுதி பெட்ரோலிய அமைச்சர் காலித் அல் ஃபாலியிடம் இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டுள்ளார்.
சவுதி எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதால், கச்சா எண்ணெய் விலை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக இருக்கி றது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத் தும் வகையிலான நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
2017-18-ல் சவுதியிலிருந்து 3.68 கோடி டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.