வணிகம்

இந்தியாவில் ஆலை: தோஷிபா திட்டம்

செய்திப்பிரிவு

மின் விளக்குகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் தோஷிபா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இப்போது தோஷிபா நிறுவனத்துக்கு ஜப்பான் தவிர சீனாவில் மட்டும் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில் மேலும் ஒரு ஆலை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யோய்சி இபி தெரிவித்தார்.

இந்தியாவில் தோஷிபா மின் விளக்கு விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ரூ. 24 கோடியாகும். இத்துறையின் வளர்ச்சி ஆண்டுதோறும் 40 சதவீத அளவுக்கு உள்ளது. இந்தியாவில் ஆலை அமைப்பதன் மூலம் இந்தியத் தேவையை மட்டுமின்றி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT