வணிகம்

விரைவில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை விதிமுறைகள்: செபி அறிவிப்பு

பிடிஐ

ரியல் எஸ்டேட் அறக்கட்டளை முதலீடுகள் குறித்த விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது. இதை நிர்வகிக்கும் வணிக அறக்கட்டளைகள் குறித்த விவரமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அறக்கட்டளைக்கு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக இருவேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று செபி-யின் செயல் இயக்குநர் ஆனந்த பரூவா கூறினார். அசோசேம் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது:

விரைவிலேயே மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் அறக்கட்டளை குறித்த விதி முறைகள் வெளியிடப்படும். முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உத்திகள் ஆராயப்பட்டு வருகின்றன. முதலீடுகள் பெருகும்போது பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றார். இந்தியாவில் ஆர்இஐடி அறிமுகப்படுத்துவதே வர்த்தக சொத்துகள், அலுவலக இடங் கள், தொழில் பூங்காக்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், கிடங்குகள், அடுக்குமாடி குடியி ருப்புகள் உள்ளிட்டவை உருவாக்கு வதற்கான முதலீடுகளைப் பெறுவதற்குத்தான்.

ஆர்இடி-க்கள் செயல்பாடு பரஸ்பர நிதித் திட்டங்களைப் போல கணக்கிடப்பட்டாலும் இவற்றின் செயல்பாடு முழுக்க முழுக்க வேறுமாதிரியானது என்றார். அதேசமயம் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) போன்றது என்றார். இத்தகைய சொத்துகளை ஆயுசு முழுவதும் வைத்திருக்க முடியும் என்றார். ரியல் எஸ்டேட் அறக்கட்டளை முதலீடு குறித்து பொதுமக்களின் கருத்துகளை கடந்த மாதம் முதல் செபி வரவேற்றுள்ளது.

விதிமுறைகள் வகுக்கப் படுவதற்கு முன்பு முதலீட்டாளர் களுடன் ஆலோசனை நடத்தப் படும். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவர்களிடமிருந்து கருத்து கேட்கப்படும். ஓய்வூதிய நிதியம் உள்ளிட்ட நிதியங்களை நிர்வகிப்பது தென்னாப்பிரிக்கா, கத்தாரில் வழக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 800 கோடி டாலர் முதல் 1,000 கோடி டாலர் வரையிலான முதலீட்டைத் திரட்ட முடியும். ஆர்இஐடி நிதியைத் திரட்டி அதற்கு ஈடாக பத்திரங்ளை அளிக்கும். இதில் திரட்டப்படும் முதலீடு பெரும்பாலும் வர்த்தக சொத்துகளில் முதலீடு செய்யப் படும். அதாவது முடிவடைந்த திட்டங்கள் மற்றும் வருமானம் தரும் சொத்துகளில் முதலீடு செய்யப்படும்.

இதற்கு செபி வகுத்த வழிமுறை இறுதியானது. இதன்படி குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னர் இது ரூ. 1,000 கோடியாக இருந்தது. ஆர்இஐடி வசம் உள்ள நிதி சிறப்பு செயல்திட்டம் மூலம் (எஸ்பிவி) நேரடியாக சொத்துகளில் முதலீடு செய்யப்படும்.

SCROLL FOR NEXT