செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் `கேன்வாஸ் நைட்ரோ’ எனும் புதிய மாடல் செல்போனை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 12,990 விலையிலான இந்த செல்போன் இணையதள விற்பனை நிறுவனமான ஸ்நாப்டீல் மூலம் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினித் தனேஜா தெரிவித்தார்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட தொழில் நுட்பத்தில் இந்த செல்போன் வெளிவந்துள்ளது. அழகிய வடிவமைப்பு, உபயோ கிப்பது எளிது மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வாடிக்கை யாளரை இந்த செல்போன் சென்றடைவதற்காக இணையதள விற்பனை நிறுவனம் ஸ்நாப்டீலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் தலை முறை வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் ஒரு சில விநாடிகளில் பதிவு செய்ய முடியும் என்று தனேஜா கூறினார்.
இந்த செல்போனில் 1.7 கிகாஹெர்ட்ஸ் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர், 5 அங்குல திரை, ஆண்ட்ராய்ட் 4.4 கிட் கேட் இயங்குதளம், குரல் தேடல், கூகுள் டிரைவ், ஹாங்அவுட், 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ராம் ஆகிய நினைவகத்துடன் இது வெளிவந்துள்ளது.
இந்திய செல்போன் விற்பனைச் சந்தையில் 18 சதவீத சந்தையை மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.