$ வோடபோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி முதல் இருக்கிறார். மேலும் இந்திய செல்லுலார் நிறுவன சங்கத்தின் (சிஓஏஐ) தலைவராகவும் இருக்கிறார்.
$ Groningen பல்கலைக்கழகத்தில் டச்சு நாட்டு சட்டமும், அதன் பிறகு பொருளாதாரமும் படித்தவர்.
$ Royal Smilde Food நிறுவனத்தில் 12 வருடங்கள் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். அதன் பிறகு 1989 டச்சு நாட்டு டெலிகாம் நிறுவனமான கே.பி.என் நிறுவனத்தில் கம்பெனி செயலாளராக இணைந்தார்.
$ 2003-ம் ஆண்டு வரை கேபிஎன் குழுமத்தில் பல முக்கியமான பொறுப்புகளில் இருந்தார். அங்கிருந்து வெளியேறும் போது கேபிஎன். பிஸினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக வெளியேறினார்.
$ 2003 முதல் 2007 வரை ஆப்ரிக்க நாட்டு நிறுவனமான செல்டெல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்தார். 2008ம் ஆண்டு வோடபோன் நிறுவனத்துக்கு வந்தார்.