வணிகம்

தொழில் உற்பத்தி குறியீடு சரிவு

செய்திப்பிரிவு

ஜூலை மாத தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 0.5 சதவீதாக சரிந்துவிட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் ஐஐபி குறியீடு 3.4 சதவீதமாக இருந்தது. ராய்டர்ஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் எதிர்பார்ப்பின்படி ஐஐபி குறியீடு 1.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் கணிக்கப்பட்டதை விட மிக குறைவாக வந்திருக்கிறது ஐஐபி குறியீடு.

குறிப்பாக உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதம் 1.8 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது ஜூலையில் -1 சதவீதமாக சரிந்திருக்கிறது. இதேபோல கேபிடல் குட்ஸ், சுரங்கம் உள்ளிட்ட துறைகளும் எதிர்மறை வளர்ச்சியை சந்தித்திருக்கின்றன.

நுகர்வோர் பணவீக்கம் 7.8%

தொழிற் உற்பத்தி குறியீடு சரிவடைந்த நிலையில் பணவீக்கம் மிதமாக குறைந்து ஆகஸ்ட் மாதத்தில் 7.8 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இது 7.96 சதவீதமாக இருந்தது. அதே சமயம் உணவு பணவீக்கம் 9.36 சதவீதத்திலிருந்து 9.42 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

வரும் செப்டம்பர் 30-ம் தேதி வட்டி கடன் மற்றும் நிதிக்கொள்கையை அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தை 2016-ம் ஆண்டுக்குள் 6 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT