ஐசிஐசிஐ வங்கி கடன் முறைகேடு விவகாரத்தில் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி சுதான்ஷு தார் மிஷ்ரா, வழக்குப் பதியப்பட்ட அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி அளவுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது ஜனவரி 23-ம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து சோதனைகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், வழக்குப் பதிவு செய்த மறுநாளே விசாரணை அதிகாரி சுதான்ஷு தார் மிஷ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பொருளாதர குற்றங்களை விசாரிக்கும் சிபிஐ கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சிபிஐ அதிகாரி சுதான்ஷு தார் மிஷ்ரா இந்த வழக்கை மிகவும் தாமதமாக விசாரித்து வந்ததால் அவர் மீது ஜனவரி 22-ம் தேதி விசாரணை நட வடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. அடுத்த நாள் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது மிஷ்ரா வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.
நிறுவனங்களில் சோதனையும் நடத்தி னார். ஆனால், சோதனை செய்யப் பட்டது தொடர்பான விவரங்களை வெளியில் கசிய விட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டார். இறுதி யாக மோகித் குப்தா என்ற அதி காரியை வைத்து சோதனை நடத்தப் பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.
இந்த வழக்கில் மிஷ்ராவின் விசாரணை சரியாக இல்லாத தால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.