வணிகம்

டிஜிட்டல் பேமென்ட்-டை ஊக்குவிக்க நந்தன் நிலகேணி தலைமையில் உயர்நிலைக் குழு: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

செய்திப்பிரிவு

டிஜிட்டல் பேமென்ட் முறையை ஊக்குவிக்க நந்தன் நிலகேணி தலைமையிலான உயர்நிலைக் குழுவை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரும் ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் தொடக்க கால தலைவராக இருந்தவர் நிலகேணி. இவரது தலைமையில் ஐந்து பேரடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் டிஜிட்டல் பேமென்ட் முறையை ஊக்குவிப் பதற்கான வழிவகைகளை பரிந் துரைப்பர் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்ற தினத்திலிருந்து மூன்று மாத காலத்திற்குள் தனது பரிந்துரையை அளிக்கும்.

நாட்டில் தற்போது செயல் படுத்தப்படும் டிஜிட்டல் பேமென்ட் முறைகள், அதில் காணப்படும் இடைவெளி, டிஜிட்டல் பேமென்ட் வழங்குவ தில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அவற்றைப் போக்குவதற்கான வழிவகைகளையும் இக்குழு பரிந்துரைக்கும்.

அத்துடன் டிஜிட்டல் பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், பத்திரமானதாகவும் அமைய தற்போது உள்ள நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த தேவையான பரிந் துரைகளை அளிக்கும்.

சர்வதேச அளவில் பிறநாடு களில் டிஜிட்டல் பரிவர்த்தனை களில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து அதில் சிறந்ததை குழு பரிந்துரைக்கும்.

குழு உறுப்பினர்கள்

இந்தக் குழுவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஹெச்.ஆர். கான், விஜயா வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கிஷோர் சான்ஸி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலர் அருணா சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவில் உள்ள ஐந்தாவது உறுப்பினரான சஞ்சய் ஜெயின், அகமதாபாத் ஐஐஎம-மில் தலைமை புத்தாக்க அதிகாரியாக உள்ளார்.

SCROLL FOR NEXT