வணிகம்

111 மார்க்கங்களில் விமான சேவை: உடான் திட்டத்தில் 15 நிறுவனங்கள் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் உடான் திட்டத் தின் கீழ் 111 மார்க்கங்களில் விமா னங்களை இயக்க 15 நிறுவனங் கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உடான் திட்டத்துக்கு 3-வது கட் டமாக ஏலம் விடப்பட்டது. குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளிக்கும் இத்திட்டத்தின்கீழ் அனைவருக் கும் விமான சேவை கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 111 மார்க்கங்களில் விமானங்களை இயக்குவதற்கு ஏலம் விடப்பட்டது. இதில் 15 நிறு வனங்கள் ஆரம்ப கட்ட விண்ணப் பத்தை அளித்துள்ளன. ஸ்பைஸ் ஜெட் 37 வழித் தடங்களிலும், இண் டிகோ 20 வழித் தடங்களிலும் விமான சேவை தொடங்க விண்ணப்பித் துள்ளன. கோதாவத் எண்டர் பிரைசஸ் நிறுவனம் 15 வழித் தடங் களில் விமானங்களை இயக்க விண்ணப்பித்துள்ளது.

ஹெலிகாப்டர் சேவை இயக்கு வது இந்த ஏலத்தில் இடம்பெறவில்லை. ஏற்கெனவே 2-வது கட்ட ஏலத்தில் ஹெலிகாப்டர் சேவை பகுதிகள் நிலுவையில் உள்ளதால் மூன்றாம் கட்ட ஏலத்தில் ஹெலிகாப்டர் சேவை மார்க்கம் சேர்க்கப்படவில்லை. கடந்த ஆண்டு உடான் -2 திட்டத்தில் வட கிழக்கு மாநிலங்களில் சில மலைப் பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

ஏற்கெனவே 31 ஹெலிபோர்ட் கண்டறியப்பட்டும் அவை இன்னும் தயாராகவில்லை. இதற்கு முன்பு ஹெலிகாப்டர் சேவைக்கு லைசென்ஸ் வழங்கப்படவில்லை. ஹெலிகாப்டர் சேவைக்கு அதிக பாதுகாப்பு அவசியமாகும். பெரும் பாலான நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவையில் உள்ள சிரமங் களைக் கருத்தில் கொண்டு முன் வரவில்லை. இதனால் பெரும் பாலான ஹெலிபோர்ட்கள் மாநில அரசு வசமோ அல்லது ராணுவ வசமோ உள்ளன. பொது போக்கு வரத்துக்கான ஹெலிபோர்ட் தயாராகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடான் திட்டம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஒரு மணி நேர விமான பயணத்துக்கு அதிகபட்ச கட்ட ணம் ரூ. 2,500 ஆகும். 2017-ம் ஆண்டு உடான் - 1 திட்டத்தில் 5 நிறுவனங்கள் 128 வழித்தடங்களில் விமான சேவையைத் தொடங்கின. இரண்டாம் கட்டமாக 15 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT