தங்கம் நுகர்வில் உலகில் 2வது பெரிய நாடான இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வியை 2018-ம் ஆண்டு இறக்குமதிக் குறைவும், அதிகரித்து வரும் விலையும் அறிவுறுத்துகிறது.
அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 762 மெட்ரிக் டன்களாகக் குறைந்துள்ளது என்றும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20% குறைவு என்றும் அதிகாரபூர்வமற்ற, ஆனால் இது பற்றிய தகவல்கள் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு குறைவாக இறக்குமதி செய்யப்பட்டதில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் இறக்குமதி 23% குறைந்தது. அதாவது 60 டன்கள் குறைந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லையென்றாலும் இந்தத் துறையைச் சார்ந்தவர்களின் தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.
ரூபாய் மதிப்பு சரிவினால் தங்கம் வாங்க அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருப்பதால் தங்கம் வாங்குவது குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். பணப்புழக்கத்தில் இறுக்கம், தங்கம் நுகர்வில் அரசின் அளவுகோல்கள் ஆகியவையும் தங்கம் நுகர்வு குறைவதற்குக் காரணம் என்று தெரிகிறது.
ஆனால் 2019-ன் முதல் பாதியில் இந்த நிலை நீடிக்காது என்றும் தங்கத்திற்கான தேவை உள்நாட்டில் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.