கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதி ஆண்டின் முடிந்த டிசம்பர் காலாண்டில் ரூ. 178 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
வட்டி வருமானம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.418 கோடியாக உள்ளது. இதன் மூலம் நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.178 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.154.79 கோடியாக இருந்தது.
2018-ம் ஆண்டில் தொடர்ந்து நிலையான நிகர லாப வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 66,141 கோடியாக உள்ளது.