வணிகம்

வென்ட் இந்தியா லாபம் 65% உயர்வு

செய்திப்பிரிவு

முருகப்பா குழுமத்தின் அங்கமான வென்ட் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ. 5.44 கோடியாகும்.

நிறுவனத்தின் வருமானம் முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டியதை விட 19 சதவீதம் அதிகரித்து ரூ. 42.85 கோடியாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் 9 மாத காலத்தில் நிறுவனத்தின் நிகர விற்பனை வருமானம் ரூ. 125.42 கோடியாகும். இது முந்தைய ஆண்டை விட 19 சதவீதம் அதிகமாகும். அதேபோல லாபம் 87 சதவீதம் அதிகரித்து ரூ.15.41 கோடியாக உள்ளது.

இதையடுத்து பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக (ஈவுத்தொகை) ரூ.10 மதிப்புடைய பங்குக்கு ரூ. 15 வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT