வணிகம்

விற்பனையை அதிகரிக்க சுஸுகி திட்டம்

பிடிஐ

இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளாக சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அதுல் குப்தா தெரிவித்தார்.

நிறுவனத்தின் புதிய ரக மோட்டார் சைக்கிளான சுஸுகி ஜிக்ஸரை அவர் புதன்கிழமை ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது இத்தகவலைத் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒரு சதவீத சந்தையை மட்டுமே சுஸுகி பிடித்துள்ளது.

இந்த எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிக்ஸர் மோட்டார் சைக்கிள் 155 சிசி திறன் கொண்டதாகும்.

SCROLL FOR NEXT