சர்வதேச அளவில் மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் 86-வது இடத்தை டாடா பிராண்ட் பிடித் துள்ளது. உப்பு முதல் சாஃப்ட்வேர் வரை அனைத்து துறையிலும் ஈடுபட்டுள்ள டாடா குழுமம் கடந்த ஆண்டு 104-வது இடத்தில் இருந்தது. இதன் சொத்து மதிப்பு 37 சதவீதம் அதிகரித்து 1,905 கோடி டாலராக உயர்ந்ததோடு, மதிப்பும் 86-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பிராண்ட் ஃபைனான்ஸ் ஆலோசனை நிறு வனம் சர்வதேச அளவில் பிரபல மான பிராண்டுகள் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் வெளி யிடுகிறது.
பிராண்ட் மதிப்பில் டாடா குழுமம் மிகச் சிறப்பாக முன்னேறி உள்ளதாக நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ஹெய்க் தெரிவித்துள் ளார்.
சர்வதேச நிறுவனம் அளித்துள்ள மதிப்பீடு தங்களது குழுமத்தின் செயல்பாட்டுக்குக் கிடைத்த மிகச் சிறப்பான அங்கீகாரம் என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இது சமூக ரீதியில் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். புதிய புத்தாக்கச் சிந்தனைகள் மூலம் புதிய நுட்பங்களை கண்டுபிடித்து அதை மக்களுக்கு வழங்க தூண்டுகோலாக இந்த மதிப்பீடு அமைந்துள்ளது என்றார்.
நிறுவனத்தின் மதிப்பீடு அதிகரித்துள்ளதில் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டும் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதிப்பீடு, நிறுவனத்தின் ஆட்டோமொபைல் மற்றும் உருக்கு தொழில் உள்ளிட்ட குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.