இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ருனோஜாய் தத்தா நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத் தின் சர்வதேச விரிவாக்கப் பணி களை இவர் கவனிப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக செபியின் முன்னாள் தலைவர் எம்.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் பாட் டியா, நிறுவனத்தின் இடைக்கால சிஇஓ-வாக இருந்தார்.
தத்தா ஏற்கெனவே யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பல் வேறு உயர் பதவிகளில் 20 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திட்ட மிடல், நிதி, தகவல் தொழில்நுட் பம் போன்ற துறைகளில் துணைத் தலைவர் பதவி வகித்தவர்.