குளிர்பான தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோக கோலா நிறுவனம் சர்க்கரை இல்லாத குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோக கோலா ஜீரோ என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளும் பருகும் வகையில் சர்க்கரை சத்து இல்லாத குளிர்பானமாக இது வந்துள்ளது.
அமெரிக்கா, மெக்ஸிகோ, சீனா, பிரேசில், ஜப்பானைத் தொடர்ந்து இந்தியாவிலும் இத்தகைய குளிர்பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் மேற்காசிய பிரிவு தலைவர் வெங்க டேஷ் கினி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 5-ம் தேதி முதல் இந்தியாவின் 100 நகரங்களில் 1.8 லட்சம் கடைகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். தொடக் கத்தில் ரிலையன்ஸ் சங்கிலித் தொடர் நிறுவனங்களில் மட்டும் இது விற்பனை செய்யப்படும்.