அடுத்து வரவிருக்கும் அரசுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
விரைவில் பொதுத் தேர்தல் வர வுள்ள நிலையில், அடுத்து வரவுள்ள அரசுக்கு சவாலாக, இந்தியாவின் பொருளாதார மந்த நிலை மட்டு மல்லாமல் வேலைவாய்ப்பு உரு வாக்கம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்தார். டாவோஸில் நடந்த உலகப் பொரு ளாதார மாநாட்டில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியின் போது அவர் இதைக் கூறினார்.
வேலைவாய்ப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், தேவையான அளவில் உயர்ந்து வருகிறதா என்ற கேள்விகளுக்கு அரசியல்வாதிகள்தான் பதிலளிக்க வேண்டும். இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் அவசியமாக உள் ளது. வரும் தேர்தலுக்குப் பின் வர வுள்ள அரசு இதை மனதில் வைத்து செயலாற்ற வேண்டும் என்றார்.
உலகில் மிகவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. ஆனால், பொருளா தார வளர்ச்சியின் வேகம், ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப் படும் வேலைவாய்ப்பு வளர்ச்சி யில் பிரதிபலிக்கவில்லை.
இந்தியா முதலீட்டுக்கான தேசம் என்ற பிம்பத்தை, உண்மையான வேலைவாய்ப்பு தரவுகள் உடைக்க தயாராக உள்ளன. ஆண்டுக்கு 1 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி மோடி அரசு வெற்றிபெற உதவியது. ஆனால், அது நடக்கவில்லை. இதனால் வேலைவாய்ப்பு வரும் தேர்தலில் அரசுக்கு சவாலாக மாறியுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான செயல் திட் டங்களை அரசியல்வாதிகள் வகுக்க வேண்டும் என்றார்.