வணிகம்

அல்கெமிஸ்ட் இன்ஃபிரா நிறுவனத்தின் ரூ.239 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக அல்கெமிஸ்ட் இன்ஃபிரா ரியாலிட்டி நிறுவனத் தின் சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை பறிமுதல் செய் துள்ளது. இந்தச் சொத்துகளின் மதிப்பு ரூ. 239.29 கோடியாகும்.

இந்த சொத்துகள் சண்டீகர், பஞ் சகுலா, தேரா பஸ்ஸி, பஞ்சாபில் எஸ்ஏஎஸ் நகர், ஷிம்லா ஆகிய இடங்களில் உள்ளன. இரண்டு வங்கிக் கணக்கில் உள்ள பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

2016-ம் ஆண்டு மார்ச் மாதத் தில் இந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது செபி புகார் அளித்தது. இதையடுத்து இந்நிறு வனத்தின் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. விசாரணை யில் இந்நிறுவனம் பல போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் மோசடிகள் செய்தது தெரியவந்தது.

பல முதலீட்டாளர்களிடமிருந்து எந்த நோக்கத்திற்காக நிதி திரட்டப் பட்டதோ அவை பயன்படுத்தப் படவேயில்லை என்பதும் விசாரணையில் புலனாகியது. மேலும் இந்தப் பணம் முழுவதும் போலியான நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் கண்டு பிடிக் கப்பட்டது.

பின்னர் இந்தத் தொகை மூலம் பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே இந்நிறுவனத்துக்கு தலைவராக 2012-ம் ஆண்டு வரை இருந்த தொழிலதிபர் கே.டி.சிங் என்பவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT