வணிகம்

யெஸ் வங்கி சிஇஓ ரவ்னீத் கில்

செய்திப்பிரிவு

யெஸ் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ரவ்னீத் சிங் கில் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். தற்போதைய தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாராக்கடன் அதிகரிப்பு, நிகர நஷ்டம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், யெஸ் வங்கி யின் தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் பதவிக் காலத்தை நீட்டிக்க ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. இதையடுத்து ராணா கபூர் ஜனவரி மாத முடிவில் பதவியிலிருந்து விலக உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை செயல் அதிகாரியாக ரவ்னீத் கில் என்பவரை யெஸ் வங்கி இயக்குநர் குழு நியமனம் செய்துள்ளது.

ரவ்னீத் கில் தற்போது டாயிஷ் வங்கியின் இந்தியப் பிரிவுக்குத் தலைமை வகித்துவருகிறார். இவருக்கு இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிடையேயும் சுமுகமான உறவு உள்ளதாகவும், சர்வதேச வங்கிச் சேவைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT