வணிகம்

டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.178 கோடி

செய்திப்பிரிவு

இரு சக்கர மற்றும் ஆட்டோ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ. 178 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய லாபத்தை விட 15 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய ஆண்டில் இந்நிறுவனம் ரூ. 154.5 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 3,703 கோடியிலிருந்து ரூ. 4,664 கோடியாக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT