இருதரப்பு வர்த்தகத்தைத் தங்களின் சொந்த நாணயங்களி லேயே செய்வதற்கான இந்தியா வின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.
இந்தியா தனது அண்டை நாடான சீனாவுக்கு 2017-18 நிதி ஆண்டில் 13.4 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. மற்றும் 76.4 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள் ளது. இந்த இடைவெளியால், இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக் குறை நிலவுகிறது.
இந்தியாவின் வர்த்தகப் பற்றாக் குறையை சரிசெய்ய சொந்த நாண யங்களில் வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ஏற்றுமதி அதிகரிக் கும் என்றும் இந்திய ஏற்றுமதி யாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கணேஷ் குமார் குப்தா கூறியுள்ளார்.
எனவே, இந்திய அரசும் சீனாவிடம், இரு நாடுகளும் தங்க ளின் சொந்த நாணயங்களிலேயே வர்த்தகம் செய்யலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக் கலாம் என்பதாலும், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும் என்பதாலும் இந்தியா திட்ட மிட்டது. சீனா மட்டுமல்லாமல், ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா உள்ளீட்ட நாடுகளுடனும் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்வது குறித்து இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், இந்தியாவின் இந்த கோரிக்கையை சீனா நிராகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக் குத்தான் லாபமே தவிர, சீனாவுக்கு இல்லை என்பதால் சீனா தவிர்த்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.