வணிகம்

2 நிறுவனங்களை வாங்கியது சிப்லா

செய்திப்பிரிவு

மருந்துப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சிப்லா நிறுவனம் கோவா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நிறுவனங்களைக் கையகப்படுத்தியுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் ஒப்பந்த அடிப்படையில் சிப்லா நிறுவனத்துக்கு மருந்து தயாரித்து அளித்து வந்தவையாகும். இவற்றை ரூ. 100.93 கோடிக்கு சிப்லா வாங்கியுள்ளது.

மெடிஸ்பிரே லேபரட்டரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் மூலம் இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு சிப்லா இயக்குநர் குழுமம் வெள்ளிக் கிழமை ஒப்புதல் அளித்தது. ஒரு நிறுவனத்தை ரூ. 29 கோடிக்கும் மற்றொன்றை ரூ. 71.93 கோடிக்கும் சிப்லா வாங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் சிப்லா நிறுவனப் பங்கு விலை 1 சதவீதம் உயர்ந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT