இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 150 விற்பனையகங்களைத் தொடங்க ஆஸ்திரேலியாவின் சங்கிலித் தொடர் நிறுவனமான டி பெல்லா திட்டமிட்டுள்ளது.
தற்போது 9 விற்பனையகங்களுடன் செயல்படும் இந்நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் மிகப் பெருமளவில் விரிவாக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் பிலிப் டி பெல்லா கூறினார். இந்தியாவில் காபி தொழில்துறை ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியை எட்டும். இதைக் கருத்தில் கொண்டு விரிவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் கூறினார். முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் விற்பனையகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் பல பகுதி களிலிருந்து காபி கொட்டையை தருவிக்கும் டி பெல்லா நிறுவனம் இந்தியாவில் காபி கொட்டை வறுக்கும் ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் 1,500 விற்பனை யகங்கள் உள்ளன.