வணிகம்

விவசாய கடன் தள்ளுபடி சரியான தீர்வாக இருக்காது: பொருளாதார வல்லுநர்கள் கருத்து

செய்திப்பிரிவு

விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய திட்டமிட் டுள்ளது ஒரு சரியான தீர்வாக இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ அரசு நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தேர்தலில் படு தோல்வி அடைந் தது. இதிலும், குறிப்பாக மூன்று முக்கிய மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது. வேளாண் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆனால், வேளாண் பொருள்களுக்கு உரிய ஆதரவு விலை கிடைக்காமல் விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் பாஜக தோல்வி அடைந் ததாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஆண்டில் நாடாளுமன்ற தேர் தலுடன் 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் வர உள்ளது. இதை யடுத்து மத்திய அரசு விவசாயி களின் கடன்களை தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஒரு சரியான தீர்வாக இருக் காது என்றும், இதற்கு பதிலாக விவசாயிகளின் வருவாய் அதிகரிக் கும் திட்டங்களை செயல்படுத் தலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதால் வங்களின் கடன் வழங்கும் திறன் பாதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வரும் 2019ம் ஆண்டு மே மாதம் 19 வரையில் விவசாய கடன்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வரையில் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை எதிர் கொள்வது வங்கிகளுக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, விவசாயி களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இதில் குறிப்பாக ரூ.50 ஆயிரம் கோடி செலவிடுவதன் மூலம் விவசாயிகள் அதிகள விலான பலன்களை பெற வாய்ப்புள் ளது. இந்தியாவில் 21.6 கோடி விவ சாயிகள் இருக்கின்றனர். விவசாயி களுக்கு விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க செய்கின்ற அதே சமயத்தில் வருவாய் அதிகரிக் கும் திட்டங்களை செயல்படுத்து வதுதான் மிக சிறந்த தீர்வாக இருக்கும்.

ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.12 ஆயிரம் ஆண்டிற்கு இரண்டு தவணையாக வழங்குவதன் மூலமாக அவர்கள் ரூ.50 ஆயிரம் ஈட்ட வழி வகை செய்ய முடியும். தெலங்கானாவில் இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு இரண்டு முறை பயிர் செய்கின்றனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உணவு பொருள்களுக்கான ஆதரவு விலை கடுமையாக சரிந்துள்ளது.

பிப்ரவரியில் நடக்க உள்ள ரிசர்வ் வங்கி ஆய்வு கூட்டத்தில் கடன் கொள்கைகளில் மாற்றங்கள் குறித்து அறிவிக்கும் என்றும், ஏப்ரல் மாதத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT