தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த தயாராக உள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலோடு வங்கிக் கடனை திரும்ப அளிக்கத் தயாராக உள்ள தாக அன்னியச் செலாவணி மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவரது வழக்கறிஞர் அமித் தேசாய் குறிப்பிட்டார்.
தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியாக விஜய் மல் லையாவை அறிவிக்க வேண்டும் என்று கோரி அமலாக்க பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையின்போது மல்லையாவின் வழக்கறிஞர் இந்த உத்தரவாதத்தை அளித்தார்.
விஜய் மல்லையா தற்போது லண்டனில் உள்ளார். அவர் இது வரை நீதிமன்றத்தில் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. அதேபோல எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. இந்தியாவில் நடைபெறும் வழக்கு விசா ரணைக்கு ஒத்துழைப்பும் அளிக்க வில்லை என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி. சிங் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் அமித் தேசாய், சொத்துகளை முடக்குவதால் அதிகாரிகளுக்கு எந்த பயனும் கிடையாது. இந்த சொத்துகள் அனைத்துமே ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது அவை அரசாங்கத்துக்கு சொந்த மானவைதான். இதை யாருமே உரிமை கோர முடியாது.
இதனிடையே குறுக்கிட்ட அம லாக்கப் பிரிவு வழக்கறிஞர் சிங், கைப்பற்றப்பட்ட சொத்துகள் அனைத்தையும் நிர்வகிப்பது அரசு தான். தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியின் முடக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்று சட்ட விதி கூறுகிறது. இதன் அடிப்படை யில்தான் சொத்துகள் முடக்கப் பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த விதிமுறை விஜய் மல்லையாவுக்கு பொருந் தாது என்று அவரது வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். பொதுவான சட்ட விதிகளின்படி சொத்துகளை முடக்குவது என்பது சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என நீதிமன்றத் தால் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகே சொத்துகளை முடக்க முடியும். அந்த வகையில் மல்லையா மீது எவ்வித குற்றமும் நிரூபிக்கப்பட வில்லை. மேலும் ஒரு சாட்சி கூட விசாரிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாக சொத்துகள் முடக் கப்பட்டன.வழக்கமான சூழலில் தான் விஜய் மல்லையா வெளிநாடு சென்றதாக குறிப்பிட்டார்.