நாடு முழுவதும் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்க 200 இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளதாக மத்திய மின்சார வாரிய ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ரூ.16,320 கோடி செலவில் வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து இல் லங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுப்பதாக உறுதியளித் துள்ளது. இதனால் மின்சாரத்திற் கான தேவை அதிகரிக்க வாய்ப் புள்ளது. மேலும், வரும் 2019ம் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இடைவெளி யில்லாத மின்சார வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மின்சார உற்பத்தியை அதிகரிக்க மின்சார வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் படி மத்திய மின்சார வாரிய ஆணையம் அனல் நிலையம் அமைப்பதற்கான புதிய இடங் களை கண்டறியும் பணியில் ஈடு பட்டது.
இந்தநிலையில், அனல் மின் நிலையம் அமைக்க 200 தகுதியான இடங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அனல் மின் நிலையங் கள் அமைப்பது மூலமாக 428.90 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறியுள்ளது.
இந்தியாவுக்கான மின்சாரத் தேவை அதிகமாக உள்ள நிலை யில், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி என்பதும் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் இலக்கு 2022ல் 175 கிகா வாட் அளவில் இலக்கு வைக்கப் பட்டுள்ளது.
மேலும், ஹைட்ரோ கார்பன், அணு மின் உற்பத்தி போன்ற திட்டங்களை விட அனல் மின் திட்டத்திற்கு குறைந்த அளவி ளான முதலீடு மற்றும் செலவே ஆகிறது.
எனவே, அனல் மின்நிலை யங்கள் அமைப்பது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். விரைவில் இந்த 200 இடங்களிலும் மின் நிலையங்கள் அமைக்கபடும் எதிர்பார்க்கப் படுகிறது.