வணிகம்

ஊழலை ஒழிக்கவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை: நிதி ஆயோக் துணைத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

நாட்டில் ஊழலை ஒழிப்பதற் காகவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. இது மேல் தட்டு மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பு நீக்கம் பொருளா தார அதிர்ச்சி நடவடிக்கை என முன்னாள் பொருளாதார ஆலோ சகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிலை யில், அதற்கு பதிலளிக்கும் வித மாக இக்கருத்தை ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

அர்விந்த் சுப்ரமணியன் குறிப் பிட்டுள்ளபடி, பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேல்தட்டு மக்களுக்கெதிராக எடுக்கப்பட்டது அல்ல. ஆனால் அவர் என்ன காரணத்துக்காக மேல் தட்டு மக் கள் என்ற வார்த்தையை பிரயோகப் படுத்தினார் என்பது புரியவில்லை.

இந்த நடவடிக்கையானது ஊழலுக் கெதிராக, பதுக்கிவைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று ராஜீவ் குமார் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஊழல்வாதிகளை மேல் தட்டு மக்கள் என அர்விந்த் சுப்ரமணி யன் குறிப்பிட்டிருக்க மாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் நேர்மை யான, கடின உழைப்பாளி, சட்டத்தை மதிக்கக் கூடியவர் என்றும் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT