வணிகம்

உடல் நிலை மோசமாக இருப்பதால் இந்தியாவுக்கு வர இயலாது: மெகுல் சோக்ஸி நீதிமன்றத்தில் தகவல்

செய்திப்பிரிவு

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகளில் தொடர்புடைய நகை வியாபாரி நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸி உடல் நிலை மோசமாக இருப்பதால் விசாரணைக்கு இந்தியாவுக்கு வர இயலாது என்று மும்பை நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி தனது உறவினரான மெகுல் சோக்ஸியுடன் இணைந்து பஞ் சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு நிதி மோசடி செய்துள்ளனர். இருவரும் வெளி நாடுகளுக்கு தப்பி சென்று விட் டனர். மெகுல் சோக்ஸி ஆண்டி குவா, பார்படாஸ் ஆகிய நாடு களின் குடியுரிமை பெற்று அங்கே வசிக்கிறார். இவர் மீது வங்கி முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகிறது. இவரை ஆன்டி குவாவின் விதிமுறைக்கு உட் பட்டு இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறது. இதற்கிடை யில் மெகுல் சோக்ஸி மீது இண்டர்போல் ரெட் கார்னர் நோட் டீஸ் பிறப்பித்தது. இதற்கிடையில், அவரை நிதி மோசடியில் ஈடுபட்ட தலை மறைவுக் குற்றவாளி என்று அறிவிக்க கோரியும், அவரது சொத்துகளை முடக்க வலியுறுத்தி யும் நீதிமன்றத்தில் அமலாக்துறை யினர் முறையிட்டுள்ளனர்.

இந்தநிலையில் நீதிமன்றத் துக்கு கடிதம் அனுப்பியுள்ள சோக்ஸி, தனது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் ஆன்டிகுவா நாட்டிலிருந்து 41 மணி நேரம் பயணம் செய்து இந்தியாவில் விசாரணைக்கு வர இயலாது என்றும் தனது உடல் நிலை குறித்த முழுவிவரங்களை அமலாக்கதுறையினர் நீதிமன்றத் துக்கு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் வீடியோ கான்பிரஸ் மூலமான விசா ரணைக்கு தயாராக இருப்பதா கவும் மெகுல் சோக்ஸி நீதிமன்றத் துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT