வணிகம்

ஆர்பிஐ-யின் சுதந்திர தன்மையை காக்க வேண்டும்: முன்னாள் கவர்னர் ரங்கராஜன் கருத்து

செய்திப்பிரிவு

அதிகார வர்க்கத்தினர் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக நியமிக்கப்படுவது புதிதல்ல. எனவே புதிய கவர் னர் சக்தி காந்த தாஸ், முன்னோர் களைப் போலவே ரிசர்வ் வங்கி யின் சுதந்திரத் தன்மையைப் பாதுகாக்கும் தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பி லிருந்து உர்ஜித் படேல் ராஜி னாமா செய்த பிறகு சக்தி காந்த தாஸ் புதிய கவர்னராக நியமிக்கப் பட்டார்.

இந்த நிலையில் சக்தி காந்த தாஸ் போன்ற அதிகாரவர்க் கத்தினர் ரிசர்வ் வங்கி கவர்னர் களாக நியமிக்கப்படுவது முதல் முறையல்ல, எனவே ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்ற தரு ணத்திலிருந்து அதன் சுதந்திரத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன், திலிப் நச்சானேவின் புத்தக வெளியீட்டில் பேசுகையில்,

இதுவரையில் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் பின்பற்றி வந்த தர்மத்தைக் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT