கனடாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜென் டெக் தனது இந்தியப் பிரிவு தலைவராக ஆனந்த் திருண கிரியை நியமித்துள்ளது.
யுனிஃபைட் செக்யூரிட்டி, பொது மக்கள் பாதுகாப்பு, ஆப்ப ரேஷன்ஸ் மற்றும் அறிவுசார் தொழில் தீர்வுகள் உள்ளிட்ட சேவை களை வழங்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜென் டெக் இந்தியப் பிரிவு தலைவராக ஆனந்த் திருணகிரி என்பவரை நியமித்துள்ளது. இவர் தெற்கு ஆசிய நாடுகளில் ஜென்டெக் நிறுவனத்தின் சேவைகளை விரிவு படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளார்.
இதுகுறித்து ஜென்டெக் நிறு வனத்தின் ஆசியா, பசிபிக் நிர்வாக இயக்குநர் டேனி யல் லீ கூறியதாவது, ‘‘ஜென் டெக் நிறுவனத்தின் இந்தி யப் பிரிவு தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஆனந்த், நிறுவனத்தின் அனைத்து வகை சேவைகளை யும் தெற்கு ஆசிய நாடு களில் விரிவுபடுத்துவார் என நம்புகிறோம். குறிப்பாக இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் இணைய சேவைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் அரசுக்குத் தேவையான வீடியோ கண்காணிப்பு, ஆக்சஸ் கண்ட்ரோல் போன்ற பல்வேறு பாதுகாப்பு சேவைகளையும் கொடுக்க உள்ளோம்” என்றார்.
ஆனந்த் திருணகிரி தகவல் தொழில்நுட்பத் துறையில் 14 வருடம் அனுபவம் உள்ளவர். ஜென்டெக் நிறுவனத்தில் இணைவதற்கு முன், ஜப்பானைச் சேர்ந்த ஆல்லீட் டெலிசிஸ் நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு மேலாளராக இருந்துள்ளார்.