அரசுத்துறை வங்கியான ஆந்திரா வங்கி தனது வாராக்கடன் ரூ. 1,553 கோடியை மீட்க ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளது.
ஆந்திரா வங்கி தனது வாராக் கடனை மீட்கும் நடவடிக்கையில் உள்ளது. அதன் 50 க்கும் மேலான வாராக்கடன் கணக்குகளை ஏலத் தில் விற்க உள்ளது. இதன் ரூ. 1,553 கோடி ஆகும். ஏலத் தொகை யைப் பணமாகக் கொடுக்க வேண் டும் என்றும் கேட்டுக்கொண் டுள்ளது. இந்த ஏலத்தில் விருப்ப முள்ளவர்கள் விண்ணப்பிக் கலாம் என்று ஆந்திரா வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வாராக்கடன் கணக்கு கள், கார்ப்பரேட் பவர் லிமிடெட், விசா ஸ்டீல் லிமிடெட், துல்ஸ் யான் என்இசி லிமிடெட், கார்ப் பரேட் இஸ்பாத் அலாய்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கும் மேலும் சில நெடுஞ்சாலை நிறு வனங்களுக்கும் சொந்தமாகும்.