பொதுத்துறை வங்கிகளின் லாபம் கடந்த நிதி ஆண்டில் 27 சதவீதம் சரிந்துள்ளது. இத்தகவலை மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துமூலமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் லாபம் கடந்த நிதி ஆண்டில் 26.8 சதவீத அளவுக்கு சரிந்தது. இவற்றின் மொத்த லாபம் ரூ. 37,017 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் (2012-13) பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய லாபம் ரூ. 50,583 கோடி என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு 51 சதவீதத்துக்கும் மேலாக பங்கு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பும் லாபம் குறைந்ததற்குக் காரணம் என்றார்.