இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்றமான வர்த்தகம் இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 453 புள்ளிகள் ஏற்றம் கண்டு 36170 புள்ளிகளில் உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 129 புள்ளிகள் உயர்ந்து 10,858 புள்ளிகளில் உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஐடி துறை தவிர அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் இருந்தன.
பஜாஜ் ஆட்டோ, கோட்டக் மஹிந்திரா, ஹிண்டால்கோ, எம் அண்ட் எம், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.