வணிகம்

திவால் சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டதால் ரூ. 3 லட்சம் கோடி வாராக் கடன் சொத்து மீட்பு

செய்திப்பிரிவு

வங்கிகளின் வாராக் கடனை மீட்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திவால் சட்ட மசோதாவால் ரூ. 3 லட்சம் கோடி சொத்துகள் கடந்த 2 ஆண்டுகளில் மீட்கப் பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின்கீழ் மொத்தம் 9 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன.

இந்த சட்டம் அமல்படுத்தப் பட்டதால் நேரடியாகவும் மறை முகமாகவும் விளைவுகள் ஏற்பட்டு ரூ. 3 லட்சம் கோடி சொத்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக நிறு வன விவகாரத்துறைச் செயலர் இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ் தெரி வித்துள்ளார்.

இந்தத் தொகையானது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய விதி களுக்குள்பட்டு கடனுக்கான சொத்து மீட்பு, மறு பரிசீலனை திட்டம் ஆகியவை மூலம் பெறப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 3,500-க்கும் மேலான வழக்குகள் மறு அனுமதி அளவில் ஏற்கப்பட்டு ரூ. 1.2 லட்சம் கோடி செட்டில் செய்யப் பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டி னார். திவால் மசோதா சட் டத்தை செயல்படுத்துவதற்கு என்சிஎல்டி அனுமதி அளிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

மொத்தம் 1,300 வழக்குகள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் 400 வழக்குகள் நிறுவன திவால் சட்ட நடைமுறையின்கீழ் முடித்து வைக்கப்பட்டன. இதில் 60 வழக்குகள் சீரமைப்பு திட்டத் துக்கு அனுமதிக்கப்பட்டது. 240 வழக்குகளின் சொத்துகளை விற்று கடனை வசூலிக்கும் நடை முறைக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது. 126 வழக்குகள் மீது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மூலம் ரூ. 71 ஆயிரம் கோடி கடன் தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த மசோதாவின் கீழ் வரும் வழக்குகள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றின் மூலமாக வரவிருக்கும் தொகை ரூ. 50 ஆயிரம் கோடி என்றும் அவர் கூறினார். இந்த வழக்குகள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளதாகவும் விரைவில் இத்தொகை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏறக்குறைய ரூ. 1.2 லட்சம் கோடி மதிப்பிலான தொகைகள் சமரச தீர்வு மூலம் தீர்க்கப்பட்டன. முந்தைய செட்டில்மென்ட் தொகை யுடன் சேர்க்கும்போது இந்த மதிப்பு ரூ. 2.4 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஸ்ரீனிவாஸ் கூறினார்.

இதன் மூலம் வங்கிகளின் வாராக் கடன் தொகை இப்போது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட் டுள்ளன. இதன் மூலம் வங்கி களுக்கு திரும்பிய தொகை ரூ. 45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 50 ஆயிரம் கோடி வரையாகும் என் றார். ஒட்டமொத்தமாக ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் தொகை நேரடியாகவும் மறைமுகமாகவும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT