பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஹெச்டிஎப்சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.1,100 கோடி வீட்டுக் கடன் மானியத்துக்கு செலவு செய்துள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய வீட்டுக் கடன் தனியார் நிறுவனமான ஹெச்டிஎப்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது, பிர தம மந்திரி ஆவாஸ் யோஜனா திட் டத்தின் கீழ் 51,000 வாடிக்கை யாளர்களுக்கு ரூ.1,100 கோடி கடன் மானியத்துக்கு செலவு செய்யப் பட்டுள்ளது. கடனுடன் இணைந்த மானிய திட்டத்தின் கீழ் இந்த கடன் அளிக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் நலிந்த பிரி வினர், குறைந்த வருமான பிரிவி னர் மற்றும் நடுத்தர வருமான பிரிவினைச் சேர்ந்த கடனாளி களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.9,800 கோடி கடன் அளித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரேணு சூட் கர்நாட் கூறுகையில், பொருளா தாரத்தில் பின் தங்கிய பிரிவின ருக்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டம் மத்திய அரசின் மிகச் சிறப்பான திட்டமாகும்.
அரசு ஒவ்வொரு முறையும் இந்த திட்டத்தினை மேம்படுத்தி வருவ தால், மக்களிடையே நல்ல வர வேற்பு உள்ளது. வீடு வாங்குபவர் களால் இந்திய ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக முதல் வீடு வாங்கும் பயனாளிகளுக்கு இந்த திட்டம் சிறப் பான பயனை அளிக்கிறது.
நடப்பாண்டில், செப்டம்பர் மாதத் துடன் முடிவடைந்த காலாண்டில் வீட்டுக் கடன் அனுமதி அளிப்பது 37 சதவீதமாக உள்ளது. குறைந்த வருமான பிரிவினருக்கு கடனு டன் இணைந்த மானியத் திட்ட வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வரு மான பிரிவினருக்கு சராசரியாக மாதத்துக்கு 8,300 கடன் அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக மாதத்துக்கு சராசரியாக ரூ.1,354 கோடி கடன் அனுமதி அளிக்கப் படுகிறது. இந்த பிரிவினரின் சரா சரி கடன் அளவு ரூ. 10.1 லட்சம் மற்றும் ரூ.17.6 லட்சமாகும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப் பட்டது. குறைந்த, நடுத்தர, வருமான பிரிவினர் மற்றும் பொருளாதாரத் தில் நலிவடைந்தவர்கள் வீடு வாங்க அறிமுகம் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு வரை இந்த திட்டம் நீட்டிக் கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர் கள், குறைந்த வருமானம் கொண்ட வர்களுக்கு 6.5 சதவீதம் வட்டி மானி யம் அளிக்கப்பட்டது. ரூ.9 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் வரை வரு மானம் கொண்டவர்களுக்கு 4 சதவீதம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியம் அளிக்கப்பட்டது. இந்த கடனை 20 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தலாம். இதன் மூலம் பயனாளிகள் ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.67 லட்சம் வரை வட்டி மானிய பயன் பெறுவர். இந்ததிட்டம் மீண்டும் 2019 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு, தற்போது 2022 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.