பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு (எப்டிஐ) வரம்பை 49 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதை தொழில்துறையினர் வரவேற்றுள் ளனர். இருப்பினும் இந்த விஷயத் தில் எச்சரிக்கையோடு இருக்கும்படி பாதுகாப்பு நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்புத் துறையில் 49 சதவீதம் மட்டுமே நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதிப்பதால் சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் பெரிய நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டாது. அத்த கைய நிறுவனங்களை ஈர்க்க இந்த வரம்பு போதுமானதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) 26 சதவீதமாக இருந்த முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை வரவேற் றுள்ளது. இதன் மூலம் 51 சதவீதம் இந்திய அரசு வசம் இருப்பதால் முழுக் கட்டுப்பாடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய முடிவை எடுத்ததன் மூலம் பாது காப்பு கருவிகள் தயாரிக்கும் நிறு வனங்கள் இந்தியாவில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும். இதன் மூலம் இந்தியாவிலேயே பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் சூழல் உருவாகும் என குறிப்பிட்டுள்ளது.
அந்நிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களோடு இணைந்து கூட்டாக பாதுகாப்பு கருவிகளை தயாரிப்பதற்கு மற்றும், மேம் படுத்துவதற்கு உதவியாக இந்த வரம்பு இருக்கும் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை மாலையில் நடை பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை (எப்டிஐ) உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் பாதுகாப்புத் துறைக்கு 3,800 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்படு கின்றன. முதலீட்டு வரம்பு அதி கரிக்கப்பட்டதால், இந்தியாவி லேயே இத்தகைய கருவிகள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அரசு கருதுகிறது.
பொதுவாக உற்பத்தித் துறையில் இரண்டு காரணிகள் முக்கியமானவை. முதலாவது முதலீடு, அடுத்தது தொழில்நுட்பம். ராணுவ தளவாடங்களுக்கு இவை இரண்டும் அவசியம். தற்போது முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வர்த்தக ரீதியில் இந்தியா செயல்படத் தயாராக உள்ளது என்பதை பிற நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது என்று பானர்ஜி குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே தொழில்நுட்ப மேம்பாடு எட்டப்படுமாயின் அதில் காப்புரிமை பெற முடியும். இதனால் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே இருக்கும் என்றும் பானர்ஜி சுட்டிக் காட்டினார்.
பாதுகாப்புத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. சில பிரிவுகளில் 100 சதவீத அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சிஐஐ துணை இயக்குநர் ஜெனரல் சுஜித் ஹரிதாஸ் சுட்டிக் காட்டினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர (எஸ்எம்இ) நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாகும். பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களை தயாரித்து அளிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை அவை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹரிதாஸ் குறிப்பிட்டார்.
இத்துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் அவசியம் என்பதை இந்திய தனியார் துறையும் நன்கு உணர்ந்துள்ளது. தனியார் துறையினரும் இதில் ஈடுபட அனுமதிப்பது மிகவும் உற்சாகமளிக்கும். அத்தகைய அனுமதிக்கு தகுதியானவைதான் இந்திய நிறுவனங்கள் என்று டாடா சன்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
டாடா குழுமம் ஏற்கெனவே பாதுகாப்புத் துறையில் ஈடுபட் டுள்ளது. டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் நான்கு நிறுவனங்களைக் கொண் டது. ஹைதராபாதில் உள்ள அடி பாட்லாவில் உள்ள சிறப்பு பொரு ளாதார மண்டலத்தில் சிகோர்ஸ்கி மற்றும் லாக்ஹீட் மார்டின் மற்றும் ருவாக் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்களின் கூட்டோடு செயல்படுகிறது.
அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களோடு கூட்டு சேர முன்வரும் என்று புஞ்ச் லாயிட் குழுமத்தின் தலைவர் அதுல் புஞ்ச் தெரிவித்தார்.