வணிகம்

டி.எஸ். விஜயன் - இவரைத் தெரியுமா?

செய்திப்பிரிவு

$ காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) தலைவர். 2013 பிப்ரவரியில் இருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ ஐ.ஆர்.டி.ஏ. பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

$ 30 வருடங்களுக்கு மேலே காப்பீட்டுத் துறையில் அனுபவம் பெற்றவர். 2006-ம் ஆண்டு எல்.ஐ.சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஐந்து வருடங்கள் தலைவராக இருந்தார்.

$ கேரள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், நிர்வாகத்தில் பட்டயப்படிப்பும் படித்தவர்.

$ ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.

$ ஊழல் வழக்கு காரணமாக மே 2011-ம் ஆண்டு எல்.ஐ.சி. தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

$ நிதி அமைச்சகமும் மற்றும் சிபிஐ-யும் இவர் குற்றமற்றவர் என ஒப்புதல் அளித்த பிறகு ஐ.ஆர்.டி.ஏ. தலைவரானார்.

SCROLL FOR NEXT