வணிகம்

நவம்பரில் பொதுத்துறை வங்கிகள் பங்கு விற்பனை: நிதிச் சேவை செயலர் தகவல்

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளின் பங்கு வெளியீடு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என மத்திய நிதித்துறை செயலர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளுக்கான நிதித் தேவை சுமார் ரூ. 2.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பேசல்-3 முதலீட்டு விதிமுறைகளின் படி இந்த நிதி திரட்டப்படவுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடனான ஆலோ சனைக் கூட்டத்துக்குப் பிறகு, நிதித்துறை செயலர் ஜி.எஸ். சாந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிதித் தேவைகளைப் பொருத்து, பொதுத்துறை வங்கி களின் பங்குகள் விற்பனை செய்யப்படலாம். இதுதொடர்பாக மத்திய அமைச்சரவையை அணுகி, ஒப்புதலைப் பெறுவோம். தகுதிவாய்ந்த நிறுவனங் களுக்கு நேரடியாக பங்குகளை விற்பனை செய்வது அல்லது தொடர் பங்கு வெளியீடு என கலவையான முறைகளில் இந்த நிதி திரட்டல் இருக்கும். தீபாவளி சமயத்தில் அதாவது நவம்பர் மாதத்தில் இந்த நடவடிக்கை தொடங்கும். பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனத்துக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ. 11,200 கோடி நிதி உயர்த்தப்படமாட்டாது என்றார்.

எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் நடப்பு நிதியாண்டில் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டப்போவது குறித்து பேசும்போது, “அந்த வங்கிகளுக்கும் நடப்பாண்டு நிதி தேவைப்படுகிறது. இது சாத்தியம்தான்” என்றார்.

SCROLL FOR NEXT