ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் (எஸ்பிஹெச்) நடப்பு நிதி ஆண்டில் 12 புதிய கிளைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திரம், தெலங்கானா பிராந்தியங்களில் அதிக எண்ணிக்கையில் கிளைகளைக் கொண்டுள்ள எஸ்பிஹெச் கர்நாடக மாநிலத்தில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 180 கிளைகள் இருந்தபோதிலும் இவற்றில் பெரும்பாலானவை கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் உள்ளன. இப்போது பெங்களூர் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிய கிளைகளைத் தொடங்க வங்கி திட்டமிட்டுள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சாந்தனு முகர்ஜி தெரிவித்துள்ளார். வங்கிக்கு தற்போது 1,700 கிளைகள் உள்ளன. இவற்றில் 63 சதவீத கிளைகள் தெலங்கானா, ஆந்திர பகுதியில் உள்ளன.