இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் ( ICAI) வேலைவாய்ப்பு தளத்தினை தொடங்க உள்ளது. பட்டய கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப் பினை அதிகரிக்கும் விதமாக இந்த முயற்சியினை எடுத்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தளத் தினை செப்டம்பர் 1-ம்தேதி அறி முகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
CAjobs.com என்கிற இந்த தளத் தினை ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் கெகி மிஸ்திரி தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் தீரஜ் குமார் கந்தேல்வால் கூறுகை யில், பட்டய கணக்காளர்களுக்கும், அவர்களது தேவை இருக்கும் நிறுவனங்களுக்கும் இணைப்பு பாலமாக இந்த தளம் இருக்கும்.
ஆகஸ்ட் 31-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள தலைமைச் செயல் அதிகாரிகள் மாநாட்டில் இந்த இணையதளம் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
ஆடிட்டர்களை தேர்ந்தெடுப்பது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த குறையை இந்த தளம் பூர்த்தி செய்யும். இந்த தளத்தில் இந்திய பட்டய கணக்காளர்கள் பதிவு பெற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள 1.60 லட்சம் பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த தளத்தின் மூலம் பெண் உறுப்பினர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகள் எளிதாகும் என்றார். ஆரம்பத்தில் இந்த தளம் இலவச சேவைகளை கொண்டிருக்கும் என்றும் குறிப் பிட்டார்.