வணிகம்

ஜேம்ஸ் ஹோகன் - இவரைத் தெரியுமா?

செய்திப்பிரிவு

$ அபுதாபியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எதியாட் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2006 செப்டம்பர் முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் இவர்.

$ 1975ம் ஆண்டு Ansett Airlines நிறுவனத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு பிஎம்ஐ, ஹெர்ட்ஸ், கல்ப் ஏர், போர்டி ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

$ உலக சுற்றுலா மற்றும் பயண சங்கத்தின் துணைத்தலைவராக இருக்கிறார். மேலும், சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

$ 2008ம் ஆண்டு விமான போக்குவரத்துத் துறையின் சிறந்த சி.இ.ஓ.வாக சி.இ.ஓ பத்திரிகை இவரை தேர்ந்தெடுத்தது. மேலும் 2010-ம் ஆண்டின் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

$ பல நாடுகளின் விமான நிறுவனங்களில் (ஏர் பெர்லின், விர்ஜின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில) கணிசமான பங்கினை எதியாட் வாங்கியது இவர் பொறுப்பில் இருக்கும் போதுதான். சமீபத்தில் கூட இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை எதியாட் வாங்கியது.

SCROLL FOR NEXT