வணிகம்

பங்கு வெளியீட்டில் இறங்குகிறது யூடிஐ மியூச்சுவல் பண்ட்

செய்திப்பிரிவு

நாட்டின் பழமையான மியூச்சுவல் பண்ட் நிறுவனமான யூடிஐ விரைவில் பங்குகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை நிதி அமைச்சகம் விரைவில் வழங்க உள்ளது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமான மத்திய அரசின் பங்குகள் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.

எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் எல்.ஐ.சி. ஆகிய நிறுவனங்களிடம் 74 சதவீதம் பங்குகள் இருக்கிறது. மீதம் இருக்கும் 24 சதவீத பங்குகள் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான T Rowe Price நிறுவனத்திடம் இருக்கிறது.

இந்த நிறுவனம் 2008ம் ஆண்டே பங்குகளை வெளியிட திட்டமிட்டது. ஆனால் அப்போதைய சந்தை சூழ்நிலைகள் சரி இல்லாத காரணங்களை அந்த திட்டம் தள்ளிப்போடப்பட்டது. 4.8 கோடி பங்குகளை ஐபிஓ மூலம் விற்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT