புதுமை படைக்கும் நிறுவனங்களின் பட்டியலில் டிசிஎஸ் நிறுவனத்தை போர்ப்ஸ் சேர்த்திருக்கிறது. 100 நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் டிசிஎஸ்-க்கு 57வது இடம் கிடைத்திருக்கிறது. போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் புதுமையான தீர்வுகள், ஐடியாக்களை செயல்படுத்தும் நிறுவனங்களை பட்டியலிடும்.
போர்ப்ஸ் பத்திரிகை எங்களை அங்கீகரித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.