படம்: மெட்டா ஏஐ 
வணிகம்

ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை: நிலவரம் என்ன?

தமிழினி

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.13) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி​யில் இருந்து தங்​கத்​தின் விலை உயர்ந்து வந்தது. இதனையொட்டி, சென்னையில் இன்று (நவ.13) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.94,400க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை பவுனுக்கு ரூ.1600 கூடிய நிலையில், தற்போது மீண்டும் ரூ.800 கூடியுள்ளது. இதனால், இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2400 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் ரூ.11,900 க்கு விற்பனை ஆகிறது. மேலும் பவுன் ரூ.95,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை காலையில் ரூ.9 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,83,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT