வணிகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு ரூ.1080 அதிகரிப்பு!

அனலி

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் நேற்று (அக்.28) ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய நிலையில் அந்த இன்ப அதிர்ச்சி இன்று நீடிக்கவில்லை. இன்று (அக்.29) பவுனுக்கு ரூ.1080 அதிகரித்து மீண்டும் ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது.

கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், பவுனுக்கு ரூ.1080 உயர்ந்து ஒரு பவுன் ரூ.89,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,66,000-க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT