வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு 

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்​து, ரூ.96 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்யப்பட்டது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்துக்கு ஏற்ப சமீப​கால​மாக தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​கிறது. அதன்​படி, அக்​.8-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.90 ஆயிரத்தை தாண்​டிய நிலை​யில், அக்​.17-ம் தேதி ரூ.97 ஆயிரம் என்ற புதிய உச்​சத்தை தொட்​டது.

மேலும் அதி​கரிக்​கும் என எதிர்​பார்த்த சூழலில் மறு​நாள் பவுனுக்கு ரூ.1,600 சரிந்​தது. அதன்​பின் அக்​.20-ம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்​திருந்​தது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் நேற்று கிரா​முக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்​து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்​துக்​கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்​துக்​கும் விற்​பனை​யானது. அதே​நேரம், வெள்ளி விலை கிரா​முக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிர​மும் சரிந்​து, ஒரு கிராம் ரூ.188-க்​கும், ஒரு கிலோ ரூ.1 லட்​சத்து 88 ஆயிரத்​துக்​கும் விற்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT