வணிகம்

இன்போசிஸ் உதவியாளர் டூ ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவன சிஇஓ

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தின் சிறு கிராமத்​தைச் சேர்ந்​தவர் தாதா​சாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்​துள்​ளார். பின்​னர் புனே நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை​யில் ரூ.4 ஆயிரம் சம்​பளத்​தில் வேலைக்கு சேர்ந்​துள்​ளார்.

சம்​பளம் குறை​வாக இருந்​த​தால், இன்​போசிஸ் நிறு​வனத்​தில் ரூ.9 ஆயிரம் கிடைக்​கவே உதவி​யாள​ராக சேர்ந்​தார். கணினிகளில் பணிபுரி​யும் ஊழியர்களை கவனித்த அவர், இது​ போன்ற வேலையில் சேர என்ன செய்ய வேண்டும் என்று கேட்​டுள்​ளார். 10-ம் வகுப்பு மட்​டுமே படித்​ததை உணர்ந்த அவர்​கள், இந்த வேலைக்கு பட்​டப்​படிப்பு தேவை என கூறி​யுள்​ளனர். எனினும், கிராபிக் டிசைன், அனிமேஷன் பணி​களுக்கு பட்​டப்​படிப்பை விட திறமை இருந்​தால் போதும் என கூறி​யுள்​ளனர். இதையடுத்து கிராபிக் டிசைன் குறித்து ஓராண்​டில் கற்றுக் கொண்​டார்.

அதன் பிறகு கிராபிக் டிசைன் தொடர்​பாக ஒரு நிறு​வனம் தொடங்கி உள்​ளார். வடிவ​மைப்​பாளர்​கள், மாணவர்​கள் மற்​றும் சிறு வணி​கர்​களுக்​காக டெம்ப்​ளேட்​களை வழங்​கும் இணை​யதளத்தை தொடங்​கி​னார். இவரது பணி நாடு முழு​வதும் சமூக வலை​தளங்​களில் பரவியது.

இதைப் பார்த்த பிரதமர் மோடி​யும் பாராட்​டி​னார். மேலும் ‘போட்’ நிறுவன இணை நிறு​வனர் அமன் குப்​தா, பகத் நிறு​வனத்​தில் ரூ.1 கோடி முதலீடு செய்​துள்​ளார். இன்று பகத்​தின் நிறு​வனம் ‘கன்​வா’ உள்​ளிட்ட சர்​வ​தேச நிறு​வனங்​களுக்கு கடும் போட்​டி​யாக உரு​வெடுத்​துள்​ளது.

SCROLL FOR NEXT