வணிகம்

ஜப்பான் நிறுவனத்துடன் மஹிந்திரா கூட்டு

செய்திப்பிரிவு

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழும நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா கன்வேயர் சிஸ்டம் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த சுபகிமோடோ செயின் கார்ப்ப ரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மஹிந்திரா கன்வேயர் சிஸ்டம் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் இனி மஹிந்திரா சுபகி கன்வேயர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

மஹிந்திரா கன்வேயர் சிஸ்டம் நிறுவனம் மிக அதிக அளவிலான பொருள்களைக் கையாளும் இயந்திரங்கள், சிமென்ட் ஆலை மற்றும் பிற ஆலைகளுக்கான இயந் திரங்களைத் தயாரிக்கிறது. ஜப்பான் நிறுவனம் பவர் டிரான்ஸ்மிஷன் சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.

SCROLL FOR NEXT